10 வருடங்களுக்குப்பின் நகுல்–சுனைனா ஜோடி மீண்டும் இணைந்தனர்!


10 வருடங்களுக்குப்பின் நகுல்–சுனைனா ஜோடி மீண்டும் இணைந்தனர்!
x
தினத்தந்தி 1 Oct 2018 10:45 PM GMT (Updated: 1 Oct 2018 9:52 AM GMT)

நகுல்–சுனைனா ஜோடி மீண்டும் இணைந்தனர்.

நகுல்–சுனைனா ஆகிய இருவரும் ‘காதலில் விழுந்தேன்’ என்ற படத்தில், காதல் ஜோடியாக நடித்து இருந்தார்கள். அந்த படம் திரைக்கு வந்து 10 வருடங்களை கடந்து விட்டது. இந்த நிலையில், நகுல்–சுனைனா இருவரும் மீண்டும் ஒரு படத்தில், காதல் ஜோடி ஆகிறார்கள்.

இந்த படத்துக்கு, ‘எரியும் கண்ணாடி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், மனிஷா கொய்ராலா, சுரேஷ்மேனன், அபர்ணா கோபிநாத், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சச்சின் தேவ் டைரக்டு செய்கிறார்.

Next Story