திரைப்பட இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
சென்னை,
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் செக்க சிவந்த வானம் என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளது.
இதில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர்அலி கான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்று உள்ளன என சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், சென்னை அபிராமபுரத்தில் அமைந்துள்ள திரைப்பட இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு, சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தொலைபேசி வழியே மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுபற்றி காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
Related Tags :
Next Story