ஜோடியாக திரிகின்றனர்: உறுதியான பிரபாஸ்-அனுஷ்கா காதல்?


ஜோடியாக திரிகின்றனர்: உறுதியான பிரபாஸ்-அனுஷ்கா காதல்?
x
தினத்தந்தி 2 Jan 2019 4:51 AM IST (Updated: 2 Jan 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

ஜோடியாக சுற்றி வருவதால், பிரபாஸ்-அனுஷ்கா காதல் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தமிழில் வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், சிங்கம்-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அனுஷ்கா. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் வந்த பாகுபலி படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடைசியாக அவர் நடித்து பாகமதி படம் வந்தது.

அதன்பிறகு உடல் எடை கூடியதால் அவருக்கு படங்கள் இல்லாமல் போனது. வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்து திரும்பி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மாதவனுடன் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அனுஷ்காவுக்கு 37 வயது ஆகிறது.

அவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் அவசரப்பட்டனர். ஜாதகத்தில் தடங்கல் இருப்பதாக கோவில்களிலும் பரிகார பூஜை செய்தனர். அனுஷ்காவுக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல் பரவியது.

இதனை இருவரும் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். இந்த நிலையில் பாகுபலி டைரக்டர் ராஜமவுலியின் மகன் திருமணத்தில் இருவரும் ஜோடியாக பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். மணமக்களை வாழ்த்தும்போதும் ஜோடியாகவே சென்றனர். திருமண நிகழ்ச்சியில் இணைந்து நடனமும் ஆடினார்கள்.

இந்த படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர்கள் காதலிப்பது உறுதியாகி உள்ளது என்று தெலுங்கு பட உலகினர் கிசுகிசுக்கிறார்கள்.


Next Story