மும்பையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க காஜல் அகர்வால் அழைப்பு


மும்பையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க காஜல் அகர்வால் அழைப்பு
x
தினத்தந்தி 2 Jan 2019 1:01 PM IST (Updated: 2 Jan 2019 1:01 PM IST)
t-max-icont-min-icon

பழங்குடியின விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக, மும்பையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க நடிகை காஜல் அகர்வால் அழைப்பு விடுத்துள்ளார்.

மும்பை,

பழங்குடியின விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக, நடிகை காஜல் அகர்வால் மாரத்தான் போட்டியில் பங்கேற்க உள்ளார். வரும் ஜனவரி 20ம் தேதி, மும்பையில் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகை காஜல் அகர்வால் அழைப்பு விடுத்துள்ளார். இந்த போட்டியில் தாம் பங்கேற்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, 'அமைதியை யோசி' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் காஜல் பங்கேற்று, அந்த புகைப்படங்களை தனது சமூக வலை தள பக்கத்தில், பதிவேற்றி உள்ளார். 

Next Story