எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம்


எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம்
x
தினத்தந்தி 3 Jan 2019 5:25 AM IST (Updated: 3 Jan 2019 5:25 AM IST)
t-max-icont-min-icon

எமி ஜாக்சனுக்கு அவருடைய காதலருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


நட்சத்திர ஜோடிகளான தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் திருமணம் கடந்த வருடம் நடந்தது. பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க காதலர் நிக் ஜோனாசை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் வரிசையில் நடிகை எமிஜாக்சன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

இவர் தமிழில் மதராசபட்டணம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்தார். எமிஜாக்சனுக்கும் பிரான்சை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டோவுக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். நெருக்கமாக எடுத்துக்கொண்ட படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். எமிஜாக்சனுக்கு இது 4-வது காதல். ஏற்கனவே இந்தி நடிகர் பிரகத் பாபர் அடுத்து பாக்சர் ஜோ சில்க்ரிக் ஆகியோருடன் காதலில் இருந்தார். கடைசியாக 22 வயது நடிகரான ரியான் தாமசுடன் 6 மாதங்கள் சேர்ந்து வாழ்ந்து பிரிந்தார்.

இப்போது ஜார்ஜ் பெனாய்ட்டுடன் சேர்ந்துள்ளார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து காதலருடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட படத்தை எமிஜாக்சன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, “உங்களை காதலிக்கிறேன். எனது புதிய வாழ்க்கை தொடங்கி உள்ளது. இந்த உலகின் மகிழ்ச்சியான பெண்ணாக என்னை மாற்றிய உங்களுக்கு நன்றி” என்று காதலர் பற்றி பதிவிட்டுள்ளார்.

Next Story