சினிமா செய்திகள்

மாரடைப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிநடிகர் சீனிவாசன் கவலைக்கிடம் + "||" + Actor Srinivasan Serious condition

மாரடைப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிநடிகர் சீனிவாசன் கவலைக்கிடம்

மாரடைப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிநடிகர் சீனிவாசன் கவலைக்கிடம்
மலையாள நடிகர் சீனிவாசன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகர் சீனிவாசன். இவர் தமிழில் பார்த்திபன் இயக்கிய புள்ளக்குட்டிக்காரன், பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி உள்ளார். டைரக்டும் செய்துள்ளார்.

கத பறயும்போள், தட்டத்தின் மறயத்து ஆகிய 2 மலையாள படங்களை தயாரித்துள்ளார். சீனிவாசன் இயக்கி நடித்த சிந்தவிஸ்தயாய சியாமளா என்ற மலையாள படம் தேசிய விருது பெற்றது. இவருக்கு 62 வயது ஆகிறது. மனைவி விமலா, மகன்கள் வினித், தியான் ஆகியோருடன் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருகிறார்.

காக்கநாடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஸ்டுடியோவில் புதிய படத்துக்கான டப்பிங் பணியில் சீனிவாசன் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலியும், மூச்சு திணறலும் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக சீனிவாசனை எர்ணாகுளம் மருத்துவ மையம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சீனிவாசனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உள்ளது. உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.