தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து பார்த்திபன் திடீர் ராஜினாமா


தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து பார்த்திபன் திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 1 Feb 2019 3:36 PM GMT (Updated: 1 Feb 2019 3:36 PM GMT)

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் பார்த்திபன் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.

சென்னை, 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். துணைத்தலைவர்களாக நடிகர்–டைரக்டர் பார்த்திபன், பிரகாஷ்ராஜ், செயலாளர்களாக கதிரேசன், துரைராஜ், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பார்த்திபன் தனது துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். பதவியை ராஜினாமா செய்தது பற்றியும், அதற்கான காரணத்தை பற்றியும் பார்த்திபன் எதுவும் சொல்லவில்லை.

இளையராஜா-75 நிகழ்ச்சி நாளை நடக்க உள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்க பதவியில் விலகுவதாக நடிகர் பார்த்திபன் கடிதம் அனுப்பி உள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story