திருமண முறையை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய சுஷ்மிதா சென்
திருமணத்தை கண்டுபிடித்தவன் மிகவும் மோசமானவன் என்று டுவிட்டரில் சுஷ்மிதா சென் கருத்து பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில் முதல்வன் படத்தில் ‘சக்கலக்க பேபி சக்கலக்க பேபி லுக்குவிட தோணலியா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். ரட்சகன் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர். சுஷ்மிதா சென்னுக்கு 42 வயது ஆகியும் திருமணமாகவில்லை. 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்.
இவருக்கும் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ரொமன் ஷால் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் பரவி உள்ளது. ரொமன் ஷாலுக்கு 27 வயது ஆகிறது. தன்னை விட 16 வயது குறைந்தவரை சுஷ்மிதா சென் காதலிப்பது விமர்சனங்களை கிளப்பியது. ரொமனுடன் தாஜ்மகாலில் ஜோடியாக எடுத்த படத்தை வெளியிட்டு படத்தின் கீழே எனது வாழ்க்கையின் முதல் காதல் என்று சுஷ்மிதா சென் குறிப்பிட்டு இருந்தார்.
இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் காதல் மட்டும்தான் திருமணம் இல்லை என்று மறுத்தார். இந்த நிலையில் திருமணத்தை கண்டுபிடித்தவன் மிகவும் மோசமானவன் என்று டுவிட்டரில் சுஷ்மிதா சென் கருத்து பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார். வலைத்தளத்தில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திருமண பந்தத்தை சுஷ்மிதா சென் கொச்சைப்படுத்தி விட்டதாக பலரும் கண்டித்து வருகிறார்கள். இது இந்திப் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story