ஆந்திர போலீஸ் நிலையத்தில் பானுப்பிரியாவை கைது செய்ய கோரி முற்றுகை


ஆந்திர போலீஸ் நிலையத்தில் பானுப்பிரியாவை கைது செய்ய கோரி முற்றுகை
x
தினத்தந்தி 3 Feb 2019 3:00 AM IST (Updated: 2 Feb 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திரா போலீஸ் நிலையத்தில் பானுப்பிரியாவை கைது செய்யக் கோரி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

சென்னை தியாகராய நகரில் வசிக்கும் நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்து வந்த ஆந்திராவை சேர்ந்த சிறுமியை அவர் கொடுமைப்படுத்தியதாகவும் செக்ஸ் தொல்லை கொடுக்கப்படுவதாகவும் சிறுமியின் தாய் ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள சாமர்ல கோட்டா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.  

இந்த நிலையில் பானுப்பிரியாவும் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணனும் பாண்டிபஜாரில் உள்ள போலீசில் புகார் அளித்தனர். அந்த மனுவில் ஆந்திராவை சேர்ந்த 16 வயது சிறுமியை வீட்டில் வேலைக்கு சேர்த்தோம். சிறுமியின் தாய் பிரபாவதி எங்கள் வீட்டுக்கு வந்து சென்ற பிறகு 15 பவுன் நகை, பணம் மற்றும் பொருட்கள காணவில்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பானுப்பிரியா வீட்டில் சிறுமி நகை பணத்தை திருடி தன்னிடம் கொடுத்து அனுப்பியதை பிரபாவதி ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள சாமர்ல கோட்டா போலீஸ் நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் முற்றுகையிட்டனர். 

பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யும்படி கோ‌ஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் கலைந்து சென்றனர்.

Next Story