சினிமா செய்திகள்

புதிய ‘பேட்மேன்’ நிக் ஜோனாஸ்? + "||" + New Batman Nick Jonas?

புதிய ‘பேட்மேன்’ நிக் ஜோனாஸ்?

புதிய ‘பேட்மேன்’ நிக் ஜோனாஸ்?
நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் புதிய பேட்மேனாக நடிக்க இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.
சூப்பர் ஹீரோ படங்கள் வரிசையில் பேட்மேன் படத்துக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் குவிக்கின்றன. 10–க்கும் மேற்பட்ட பேட்மேன் படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்து தயாராக உள்ள புதிய பேட்மேன் படத்தில் ஜஸ்டீஸ் லீக், டான் ஆப் ஜஸ்டிஸ் மற்றும் பேட்மேன்–சூப்பர் மேன் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள பென் அப்லெக் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் நடிக்காமல் விலகி விட்டார். 

அடுத்த பேட்மேன் படம் 2021–ம் ஆண்டு ஜூன் மாதம் 25–ந்தேதி வெளியாகும் என்று அந்த படத்தை தயாரிக்க உள்ள வார்னர் பரோஸ் நிறுவனம் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த படத்தை மேட் ரீவ் டைரக்டு செய்கிறார். பேட்மேன் கதாபாத்திரத்துக்கு நடிகர் தேர்வு நடந்து வந்தது. 

புதிய பேட்மேன் யார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில் பேட்மேன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்று இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாசிடம் கேள்வி எழுப்பியபோது, ‘‘முதல் பெயர் நிக், கடைசி பெயர் ஜோனாஸ்’’ என்று பதில் அளித்துள்ளார். இதனால் பேட் மேனாக அவர் நடிக்க இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. வார்னர் பரோஸ் நிறுவனம் இதனை உறுதிப்படுத்தவில்லை.