ஆண் ஆடைகளை விரும்பும் அமலாபால்
இன்ஸ்டாகிராமில் அமலாபால் தொடர்ந்து ஆண் உடைகளை அணிந்த படங்களை பகிர்ந்து வருகிறார்.
அமலாபால் நடித்து கடந்த வருடம் பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன் ஆகிய 2 படங்கள் திரைக்கு வந்தன. இதில் ராட்சசன் படம் நல்ல வசூல் பார்த்தது. இப்போது அதோ அந்த பறவை போல, ஆடை ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். ஆடை படத்தில் அவர் அரைகுறை உடையில் இருப்பது போன்ற தோற்றம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தி நடிகைகளை மிஞ்சும் வகையில் அவர் ஆடை குறைப்பு செய்து இருந்ததாக விமர்சனங்கள் கிளம்பின. டைரக்டர் விஜய்யை மணந்து விவாகரத்து செய்துள்ள அவர் மீண்டும் 2–வது திருமணத்துக்கு தயாராவதாக தகவல் பரவியது. இதனை அமலாபால் மறுத்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் தொடர்ந்து ஆண் உடைகளை அணிந்த படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் லுங்கியை மடித்துக்கட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து படத்தை வெளியிட்டார். அந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இப்போது லுங்கி மற்றும் டீசர்ட் அணிந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த படத்தின் கீழ், லுங்கி கட்டிக்கொண்டு ஜாலியாக பாட்டுபாடி நடனம் ஆடி மகிழ்ந்ததாகவும் அனைவரும் இயற்கையை ரசித்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழ வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த படத்துக்கும் வழக்கம்போல் வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆண் உடைகளை அணிந்து இப்படி கவர்ச்சிபோஸ் கொடுக்கலாமா என்று கண்டனங்கள் வருகின்றன. சிலர் பாராட்டியும் பேசுகிறார்கள்.
Related Tags :
Next Story