சினிமா செய்திகள்

‘மீ டூ’ அனுபவம் எனக்கு இல்லை –காஜல் அகர்வால் + "||" + I do not have experience -Kajal Agarwal

‘மீ டூ’ அனுபவம் எனக்கு இல்லை –காஜல் அகர்வால்

‘மீ டூ’ அனுபவம் எனக்கு இல்லை –காஜல் அகர்வால்
மீ டூ மாதிரி அனுபவம் ஏற்படவில்லை என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் படம் ரிலீசுக்கு தயாராகிறது. அடுத்து கமல்ஹாசனுடன் இந்தியன்–2 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. சினிமா வாழ்க்கை குறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:–

‘‘நான் கதாநாயகியாகி 10 வருடங்கள் ஆகிறது. வட இந்தியாவில் இருந்து வந்தும் தமிழ் பெண்ணாகவே என்னை பார்க்கின்றனர். மார்க்கெட் இல்லாமல் போய்விடுமோ? என்று எப்போதும் அச்சப்பட்டது இல்லை. ஒரு படம் முடிந்ததும் அடுத்த வாய்ப்பு வந்தது. தினமும் காலை 5 மணிக்கு எழுந்து விடுவேன். இரவு தூங்க 11 மணி ஆகிவிடும். 

எனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. பிடித்த இளைஞரை சந்தித்தால் காதலித்து திருமணம் செய்வேன். இல்லாவிட்டால் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன். இதுவரை தரமான படங்களில் நடித்துள்ளேன். நான் தைரியமான பெண், சில நேரம் காளிமாதிரி மாறி விடுவேன். 

ஒரு தடவை என் தோழியிடம் ஒருவன் தவறாக நடக்க முயன்றான். அவன் காலரை பிடித்து முகம் வீங்கி போகிற மாதிரி அடித்தேன். சினிமாவில் கசப்பான அனுபவம் இல்லை. படுக்கைக்கு அழைப்பது பற்றி சில கதாநாயகிகள் மீ டூ வில் பேசுகிறார்கள். அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். ஆனால் எனக்கு அதுமாதிரி அனுபவம் ஏற்படவில்லை. சினிமா மட்டுமன்றி எல்லா துறையிலும் மோசமான மனிதர்கள் உள்ளனர். என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்.’’

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.