குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 3 Feb 2019 12:13 PM IST (Updated: 3 Feb 2019 12:13 PM IST)
t-max-icont-min-icon

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு ஆகிய மூன்று பேரில் போலீஸ் வேடத்தில் அதிக படங்களில் நடித்தவர் யார்? (பி.விஜய் சங்கர், சென்னை)

மூன்று பேரில், போலீஸ் வேடத்தில் அதிக படங்களில் நடித்தவர், விஜயகாந்த்!

***

சுந்தர் சி. டைரக்‌ஷனில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ படம் என்ன ஆனது? அந்த படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதா? (வி.ராம், கடலூர்)

‘மதகஜராஜா’வை திரைக்கு கொண்டுவர, விஷால் பல கட்ட முயற்சிகளை எடுத்து விட்டார். அவருடைய முயற்சிக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. என்றாலும், விஷால் தனது முயற்சியை கைவிடவில்லை. எப்படியும் திரைக்கு கொண்டு வந்து விடலாம் என்று நம்புகிறார், விஷால்!

***

குருவியாரே, கதாநாயகனாக அறிமுகமாகி, தயாரிப்பாளராக உயர்ந்த விஜய் சேதுபதி, அடுத்து ஒரு படத்தை இயக்குவாரா? (ஜே.ஜார்ஜ், நாகர்கோவில்)

இயக்கும் திட்டம் இருக்கிறதாம். ஆனால், அது இப்போதைக்கு அல்ல. இயக்குவதற்கு இன்னும் சில வருடங்கள் போக வேண்டும் என்கிறார், விஜய் சேதுபதி!

***

தமிழ் திரையுலகில் அக்காள்–தங்கை இருவரும் நட்சத்திரங்களாகி, நிறைய படங்களில் நடித்து புகழ் பெற்று, அதிகமாக சம்பாதித்தவர்கள் யார்–யார்? (எஸ்.கோவிந்தராஜ், திருச்சி)

அம்பிகா–ராதா! இவர்களுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, எந்த நட்சத்திர சகோதரிகளும் இவர்கள் அளவுக்கு சம்பாதிக்கவில்லை!

***

குருவியாரே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் தயாராகியுள்ள ‘குயின்’ படம் எப்போது திரைக்கு வரும்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

‘குயின்’ படம் இறுதிகட்ட பணிகளில் உள்ளது. அந்த பணிகள் முடிவடைந்ததும், ‘குயின்’ படம் திரைக்கு வந்து விடும்!

***

அனுஷ்காவை பிரபாஸ் திருமணம் செய்துகொள்வாரா, மாட்டாரா? (மணி, திருவனந்தபுரம்)

இருவரும் இப்போதுதான் திருமணம் பற்றி பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். விரைவில் திருமண தகவல்களை அறிவிப்பார்கள் என்று தெலுங்கு பட உலகில் பேசப்படுகிறது!

***

குருவியாரே, விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’, அஜித் நடித்த ‘காதல் கோட்டை’ ஆகிய 2 படங்களில் அதிக விருதுகள் வாங்கிய படம் எது? (கே.ஸ்ரீதர் ராஜன், சேலம்)

‘காதலுக்கு மரியாதை’யை விட, காதல் கோட்டை’ படத்துக்கு அதிக விருதுகள் கிடைத்தன. ‘காதலுக்கு மரியாதை’ படத்துக்கு சிறந்த தயாரிப்பாளர், சிறந்த பாடல் ஆசிரியர் ஆகிய 2 விருதுகள் கிடைத்தன. ‘காதல் கோட்டை’ படத்துக்கு சிறந்த டைரக்டர், சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த உடையலங்கார நிபுணர் ஆகிய 4 விருதுகள் கிடைத்தன!

***

நடிகை ரோஜாவை இப்போது திரைப்படங்களில் பார்க்க முடியவில்லையே, ஏன்? (எச்.அப்துல் அலி, நசரத்பேட்டை)

ஆந்திரா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், ரோஜா குடும்பத்துடன் அங்கேயே குடியேறி விட்டார். அவருடைய மகள், மகன் இருவரும் அங்கேயே படிக்கிறார்கள்!

***

குருவியாரே, மும்பையை சேர்ந்த ராசிகன்னாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் எப்படி உள்ளது? (ஆர்.மணிகண்டன், கோவை)

ராசிகன்னா மும்பையை சேர்ந்தவர் என்பதால், ‘பார்ட்டி’ கொடுத்து நிறைய பட வாய்ப்புகளை பிடிப்பதாக தகவல்!

***

என்னிடம், நயன்தாராவுக்கு பொருத்தமான இரட்டை வேட கதை ஒன்று உள்ளது. அதை யாரிடம் சொல்லி சம்மதம் வாங்க வேண்டும்... சொல்ல முடியுமா? (பி.ரவீஷ்வர், வேலூர்–1)

நயன்தாரா நடிக்கும் புதிய படங்களின் கதைகளை முதலில் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனிடம் சொல்ல வேண்டுமாம். அவருக்கு பிடித்து இருந்தால், நயன்தாரா கதையை கேட்பாராம். இரண்டு பேருக்கும் பிடித்து இருந்தால், நயன்தாரா உடனே நடிக்க சம்மதிப்பாராம்!

***

குருவியாரே, இன்றைய இளைய தலைமுறை கதாநாயகர்களில், மிக மிக ஒதுங்கிப் போகும் சுபாவம் கொண்டவர் யார்? (பா.அழகேசன், திருப்பூர்)

‘அட்டகத்தி’ தினேஷ். இவர் இருக்கிற இடமே தெரியாது. அந்த அளவுக்கு ஒதுங்கிப் போகிற சுபாவம் கொண்டவர், தினேஷ்!

***

யோகி பாபுவுக்கு பெண் பார்க்கிறார்களாமே... அவருக்கு மனைவியாகிற தகுதி கொண்ட பெண் எப்படியிருக்க வேண்டுமாம்? (எம்.சுந்தர், திருப்பத்தூர்)

நகைச்சுவையை ரசிக்கிற கலா ரசிகையாக இருக்க வேண்டும் என்பது யோகி பாபுவின் எதிர்பார்ப்பு!

***

குருவியாரே, பாரதிராஜா டைரக்டராகவே நடித்து இருக்கிறாரா? அந்த படத்தின் பெயர் என்ன? (பெ.ரவீந்திரன், பெரியகுளம்)

பாரதிராஜா டைரக்டராகவே நடித்த படம், ‘கல்லுக்குள் ஈரம்.’ அவருடைய ஆரம்ப கால படங்களில், இதுவும் ஒன்று!

***

காஜல் அகர்வால், நிவேதா பெத்துராஜ் ஆகிய இரண்டு நாயகிகளில், அதிக தமிழ் படங்களை கையில் வைத்திருப்பவர் யார்? (சோ.பாண்டியராஜன், திட்டக்குடி)

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். நிவேதா பெத்துராஜ் தமிழ் படங்களில் மட்டும் நடிக்கிறார்!

***

குருவியாரே, வைஜயந்திமாலா, பத்மினி ஆகிய இருவரும் எத்தனை படங்களில் சேர்ந்து நடனம் ஆடினார்கள்? (சிவா, மதுரை–9)

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் வைஜயந்திமாலா–பத்மினி ஆகிய இருவரும் சேர்ந்து நடனம் ஆடினார்கள்!

***

நயன்தாரா, திரிஷாவைப்போல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் இளம் கதாநாயகி யார்? கே.செல்வராஜ், விருதுநகர்)

ஒருவர், இருவர் அல்ல. அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் என நிறைய பேர் இருக்கிறார்கள்!

***

குருவியாரே, விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படம் வெற்றி பெற யார் காரணம்? (கே.நடராஜன், உடுமலைப்பேட்டை)

கதாநாயகனாக நடித்த விஜய் சேதுபதி, கதாநாயகியாக நடித்த திரிஷா, டைரக்டர் பிரேம்குமார், தயாரிப்பாளர் நந்தகோபால் மற்றும் அந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் அந்த படத்தின் வெற்றியில் பங்கு உண்டு!

***

ஓவியா–ஆரவ் ஜோடியின் நட்பு தொடர்கிறதா? (எஸ்.பாலாசிங், தாரமங்கலம்)

‘‘நட்பு தொடர்கிறது. ஆனால், அதற்கு பெயர் காதல் அல்ல’’ என்று இருவருமே சொல்கிறார்கள்!

***

குருவியாரே, ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில், ஏகப்பட்ட பஞ்ச் வசனங்கள் உள்ளன. அவற்றில் இப்போதைய சமுதாயத்துக்கு தேவையான பஞ்ச் வசனம் எது? (எம்.நல்லதம்பி, சோழவந்தான்)

‘‘நல்லவனாக இரு... ரொம்ப நல்லவனாக இருக்காதே...’’ என்று ரஜினிகாந்த் பேசும் வசன வரிகள்!

***

என் அபிமான நடிகை அம்பிகா என்ன செய்கிறார்? (இ.ஜெயராமன், ஸ்ரீவைகுண்டம்)

‘நாயகி’ என்ற சின்னத்திரை தொடரில், அம்பிகா நடித்து வருகிறார்!

Next Story