காதலா, இனக்கவர்ச்சியா? விடை சொல்கிறது, `மாயநதி'
காதல் அல்லது இனக்கவர்ச்சியை கடந்து ஒரு பெண்ணால் தனது லட்சியத்தை அடைய முடிந்ததா? என்பதை சொல்லும் படம், `மாயநதி'.
பதின்ம வயதில் இயல்பாக ஏற்படும் காதல் அல்லது இனக்கவர்ச்சியை கடந்து ஒரு பெண்ணால் தனது லட்சியத்தை அடைய முடிந்ததா? என்பதை கருவாக வைத்து, `மாயநதி' என்ற படம் தயாராகிறது. ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம், இது.
`கேரள நாட்டிளம் பெண்களுடனே,' `பட்டதாரி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த அபி சரவணன், இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். `காதல் கசக்குதய்யா,' `பள்ளி பருவத்திலே' ஆகிய படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் `ஆடுகளம்' நரேன், அப்புக்குட்டி, புதுமுகம் தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்யும் அஷோக் தியாகராஜன் கூறியதாவது:-
``மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை, டாக்டர் ஆவதையே லட்சியமாக கொண்ட ஒரு பெண், இலக்குகள் ஏதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு சராசரி இளைஞன்...இவர்களை பற்றிய சுவாரசியமான நிகழ்வே, `மாயநதி.'
கவிஞர் யுகபாரதி எழுதிய பாடல்களுக்கு பவதாரிணி இசையமைத்து ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். படப்பிடிப்பு மையிலாடுதுறை, பொறையாறு, தரங்கம்பாடி, திருக்கடையூர் பகுதிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.''
Related Tags :
Next Story