கேரள அரசு விருது போட்டியில் இருந்து மோகன்லால், மஞ்சு வாரியர் விலகல்
கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த நடிகர்-நடிகை உள்ளிட்ட திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.
2018-ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியல் திருவனந்தபுரத்தில் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான விருது, கேப்டன் மற்றும் ஞான் மேரிக்குட்டி படங்களில் நடித்துள்ள ஜெயசூர்யாவுக்கும், சூடானி பிரம் நைஜீரியா படத்தில் நடித்த சவுபின் ஜாகீருக்கும் அறிவிக்கப்பட்டது.
சிறந்த நடிகை விருது சோலை மற்றும் ஒரு குப்புற சித்த பையன் படங்களில் நடித்துள்ள நிமிஷா சஜையனுக்கு கிடைத்துள்ளது. சிறந்த படமாக ஷரின் ஈஷா இயக்கிய ‘காந்தன் த லவர் ஆப் கலர்’ தேர்வானது. சிறந்த அறிமுக இயக்குனராக ஜாக்கரியா, சிறந்த பின்னணி பாடகராக விஜய் ஜேசுதாஸ், சிறந்த பின்னணி பாடகியாக ஷ்ரேயா கோஷல் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த விருது போட்டியில் இருந்து மோகன்லாலும், மஞ்சுவாரியரும் விலகிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தேர்வு குழுவினர் ஒடியன், காயம்குளம் கொச்சுண்ணி ஆகிய படங்களில் நடித்த மோகன்லாலை சிறந்த நடிகராகவும் ஓடியன், ஆமி படங்களில் நடித்த மஞ்சுவாரியரை சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்து இருந்தனர்.
இதனை கேள்விப்பட்ட மோகன்லாலும், மஞ்சுவாரியரும் விருது போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனால் மற்றவர்களுக்கு விருதுகள் கிடைத்தன. இருவரும் எதற்காக போட்டியில் இருந்து விலகினார்கள் என்பது தெரியவில்லை.
Related Tags :
Next Story