படமாகும் வாழ்க்கை கதை; ஸ்ரீதேவி வேடத்தில் மாதுரி தீட்சித்?
தமிழ்நாட்டில் பிறந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து இந்திக்கு போய் அங்கும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஸ்ரீதேவி.
30 ஆண்டுகளுக்கு மேலாக படங்களில் நடித்த அவர் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து மும்பையில் குடியேறினார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்று 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த வருடம் திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க துபாய் சென்ற ஸ்ரீதேவி அங்குள்ள ஓட்டல் அறையில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார். இது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஸ்ரீதேவியின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கப்போவதாக அவரது கணவர் போனிகபூர் அறிவித்து உள்ளார்.
தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படத்தை எடுக்க உள்ளனர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தது வரை அனைத்து விவரங்களையும் படத்தில் கொண்டு வருகின்றனர். இதில் ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட பல நடிகைகள் ஸ்ரீதேவியாக நடிக்க விருப்பம் தெரிவித்தனர்.
‘த டர்டி பிக்சர்’ படத்தில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் பெயரும் அடிபட்டது. தற்போது பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித்தை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
Related Tags :
Next Story