நவீன காதல் கதை
ரஞ்சித் ஜெயக்கொடி டைரக்ஷனில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம், ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.
விஜய் சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கியவர், ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் டைரக்ஷனில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம், ‘ஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்.’ இதில், ஹரீஸ் கல்யாண்-ஷில்பா மஞ்சுநாத் ஆகிய இருவரும் காதல் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.
படத்தை பற்றி டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது, “இது, ஒரு பிடிவாதமான காதல் கதை. நவீன காதல் கதை என்றும் கூறலாம். இந்த காலகட்டத்தில் உள்ள காதல் ஜோடியை சித்தரிக்கும் கதை. கதாநாயகனின் நண்பர்களாக மா.கா.பா.ஆனந்த், பாலசரவணன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். பாலாஜி காபா தயாரித்து இருக்கிறார். கதாநாயகன் ஹரீஸ் கல்யாண், கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் ஆகிய இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து நடித்துள்ள முத்த காட்சி பரபரப்பாக இருக்கும். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது” என்றார்.
Related Tags :
Next Story