ஆசியாவின் சிறந்த திரைப்படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ தேர்வு
தமிழ் திரையுலகின் சிறந்த டைரக்டர்களில் ஒருவரான வஸந்த், ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படத்தை தயாரித்து டைரக்டு செய்திருக்கிறார்.
இந்த படம் மும்பை திரைப்பட விழா, 23-வது கேரள சர்வதேச திரைப்பட விழா, புனே சர்வதேச படவிழா, சர்வதேச ஸ்வீடன் திரைப்பட விழா ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
இன்னும் பல சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் பார்வதி, லட்சுமிப்ரியா சந்திரமவுலி, காளஸ்வரி சீனிவாசன், கருணாகரன், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். என்.கே.ஏகாம்பரம், ரவிசங்கரன் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தில் பின்னணி இசை கிடையாது. அதுவே திரைப்பட விழாக்களில் பல பாராட்டுகளை பெற்றுள்ளன.
எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய மூன்று பேரும் எழுதிய சிறுகதைகளை திரைக்கதையாக்கி, படத்தை தயாரித்து இருப்பதாக வஸந்த் எஸ்.சாய் கூறுகிறார்.
Related Tags :
Next Story