சினிமா செய்திகள்

திரைக்கு வரும் நயன்தாராவின் 3 படங்கள் + "||" + 3 Films of Nayantara coming to the screen

திரைக்கு வரும் நயன்தாராவின் 3 படங்கள்

திரைக்கு வரும் நயன்தாராவின் 3 படங்கள்
நடிகை நயன்தாராவின் 3 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

நயன்தாரா 2005-ல் ஐயா படத்தில் அறிமுகமாகி 14 ஆண்டுகளாக திரையுலகில் கொடி கட்டி பறக்கிறார். புதிதாக எத்தனையோ கதாநாயகிகள் வந்தும் அவர் மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை. இதுவரை முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த அவர் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.

அறம், கோலமாவு கோகிலா படங்கள் பெரிய கதாநாயகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவித்தன. இந்த வருடம் ஆரம்பத்திலேயே அஜித் ஜோடியாக நடித்த ‘விஸ்வாசம்’ படம் திரைக்கு வந்து நல்ல லாபம் பார்த்துள்ளது. தற்போது நயன்தாராவின் 3 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன.

அந்தவகையில் ‘ஐரா’ படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகிறது. இதில் அவர் இருவேடங்களில் நடித்து இருக்கிறார். திகில் படமாக தயாராகி உள்ளது. மே மாதம் 1-ந் தேதி ‘மிஸ்டர் லோக்கல்’ படமும், அதனை தொடர்ந்து ‘கொலையுதிர் காலம்’ படமும் திரைக்கு வர உள்ளன.

இந்த நிலையில் மலையாளத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன.

இந்த படம் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகையில் வெளியாக இருக்கிறது.