‘நட்பே துணை’ படத்தில், ஆதி-அனகா ஆக்கி வீரராக நடித்த அனுபவம்
‘ஆம்பள,’ ‘மீசைய முறுக்கு’ ஆகிய படங்களை அடுத்து ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வெளிவர இருக்கும் படம், ‘‘நட்பே துணை.’ இதில், அவர் ஆக்கி வீரராக நடித்து இருக்கிறார்.
ஆக்கி வீரராக நடித்த அனுபவம் பற்றி ஆதி சொல்கிறார்:-
‘‘அதிக வாய் பேசிய என்னை, ‘ஆம்பள’ படத்தில் அறிமுகப்படுத்தி, ‘மீசைய முறுக்கு’ படத்தில் என் கனவை நனவாக்கி, ‘நட்பே துணை’ படத்தில் ஆக்கி வீரராக நடிக்க வாய்ப்பு அளித்தவர், டைரக்டர் சுந்தர் சி. ‘மீசைய முறுக்கு’ படத்தில் பணிபுரிந்த மொத்த குழுவும் ‘நட்பே துணை’யில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.
பள்ளியில் படிக்கும்போது கூடைப்பந்து விளையாடியிருக்கிறேன். இந்த படத்துக்காக ஆக்கி விளையாடி இருக்கிறேன். படத்தில் வரும் 22 வீரர்களில், 10 பேர் நிஜமான ஆக்கி வீரர்கள். அவர்களுக்கு இணையாக விளையாட வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்தோம். கதாநாயகி அனகா காலில் அடிபட்டும் வலியை தாங்கிக் கொண்டு விளையாடினார்’’ என்றார்.
ஆக்கி வீராங்கனையாக நடித்த அனகா கூறும்போது, ‘‘தமிழில் எனக்கு இது முதல் படம். ஆக்கி வீராங்கனையாக நடித்து இருக்கிறேன். ஆதியுடன் நடித்ததில் மகிழ்ச்சி. இசையை தாண்டி அவர் நல்ல நடிகரும் கூட என்பதை மீசைய முறுக்கு படம் நிரூபித்தது’’ என்றார்.
பேட்டியின்போது படத்தின் டைரக்டர் பார்த்திபன் தேசிங்கு, தயாரிப்பாளர் சுந்தர் சி. ஆகியோர் அருகில் இருந்தார்கள். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில், டைரக்டர் கரு.பழனியப்பன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.
Related Tags :
Next Story