சினிமா செய்திகள்

சித்தார்த்-ஜீவி.பிரகாஷ் நடிக்கும் படம்சசி டைரக்‌ஷனில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ + "||" + sivappu manjal pachai on the Sassi Direction

சித்தார்த்-ஜீவி.பிரகாஷ் நடிக்கும் படம்சசி டைரக்‌ஷனில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’

சித்தார்த்-ஜீவி.பிரகாஷ் நடிக்கும் படம்சசி டைரக்‌ஷனில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’
டைரக்டர் சசி டைரக்‌ஷனில் ஒரு புதிய படம் உருவாகிறது. அந்த படத்துக்கு ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
‘சொல்லாமலே’ படத்தில் தொடங்கி, ‘பிச்சைக்காரன்’ வரை உணர்வுகளை மையப்படுத்தி, தனது படங்களில் ஜனரஞ்சகமான முறையில் கதை சொல்பவர், டைரக்டர் சசி. அடுத்து இவர் கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷனில் ஒரு புதிய படம் உருவாகிறது. படத்துக்கு அவர், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் கதை, இது. ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை பற்றி டைரக்டர் சசி சொல்கிறார்:-

‘‘அனைத்து தரப்பினரும் தங்கள் நிஜவாழ்க்கையை உணரும் வகையில், இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அக்காவாக, மலையாள திரையுலகின் முன்னணி நடிகை லிஜோமோள் நடிக்கிறார். இவர், தமிழில் அறிமுகமாகும் முதல் படம், இது. இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.

முதல்முறையாக, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த் நடிக்கிறார். இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில், ‘பைக் சாம்பியனாக ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் காஷ்மீரா அறிமுகமாக, இன்னொரு முக்கிய வேடத்தில் மதுசூதனன் நடிக்கிறார்.

தமிழ் பட உலகின் பிரபல பைனான்சியரும், ‘வேதாளம்,’ ‘அரண்மனை,’ ‘மாயா,’ ‘பாகுபலி,’ ‘சென்னை-28 (இரண்டாம் பாகம்), ‘காஞ்சனா,’ ‘சிவலிங்கா (தெலுங்கு), ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்தவருமான ரமேஷ் பி.பிள்ளை, அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார்.’’