சினிமா செய்திகள்

மாதவனின் யாவரும் நலம் 2-ம் பாகம் + "||" + All of Madhan is part two

மாதவனின் யாவரும் நலம் 2-ம் பாகம்

மாதவனின் யாவரும் நலம் 2-ம் பாகம்
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வருகின்றன. ஏற்கனவே எந்திரன், சண்டக்கோழி, சிங்கம், விஸ்வரூபம், சாமி, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்தன.
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வருகின்றன. ஏற்கனவே எந்திரன், சண்டக்கோழி, சிங்கம், விஸ்வரூபம், சாமி, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்தன. சூர்யாவின் காக்க காக்க, பிரசன்னாவின் கண்டநாள் முதல் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களும் தயாராக இருக்கின்றன.

இந்த வரிசையில் 2009-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய யாவரும் நலம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க உள்ளனர். இந்த படத்தில் மாதவன்-நீது சந்திரா ஜோடியாக நடித்து இருந்தனர். விக்ரம் குமார் இயக்கினார். வித்தியாசமான பேய் படமாக வந்து வசூல் குவித்தது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதை மாதவன் உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் தற்போது விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதை படத்தில் நடித்து வருகிறார். நம்பிநாராயணன் பணியில் இருந்தபோது ராக்கெட் ரகசியங்களை விற்றதாக கைது செய்யப்பட்டதையும், பின்னர் அவர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.

இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். 3 தோற்றங்களில் அவர் வருகிறார். தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகிறது. இந்த படம் முடிந்ததும் யாவரும் நலம் 2-ம் பாகம் பட வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.