சினிமா செய்திகள்

பழம்பெரும் நடிகை குசலகுமாரி மரணம் + "||" + Actress Kuslakumari dies

பழம்பெரும் நடிகை குசலகுமாரி மரணம்

பழம்பெரும் நடிகை குசலகுமாரி மரணம்
பழம்பெரும் நடிகை குசலகுமாரி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை குசலகுமாரி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்-சிவாஜி கணேசன் இணைந்து நடித்த கூண்டுக்கிளி படத்தில் நடித்த 2 கதாநாயகிகளில் ஒருவர் பி.எஸ்.சரோஜா, இன்னொருவர் குசலகுமாரி. எம்.ஜி.ஆரின் மதுரை வீரன், சிவாஜி கணேசனுடன் பராசக்தி, கள்வனின் காதலி, ஹரிச்சந்திரா மற்றும் கொஞ்சும் சலங்கை, அவ்வையார் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மன்மத லீலை படத்தில் கமல்ஹாசனின் மாமியார் வேடத்தில் நடித்து இருந்தார். மலையாளத்தில் பிரேம் நசீர், தெலுங்கில் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ் ஆகியோருடனும் நடித்துள்ளார். குசலகுமாரி, பரத நாட்டியம் கற்றவர். 250 படங்களுக்கு மேல் நடனமும் ஆடியுள்ளார். கொஞ்சும் சலங்கை படத்தில் இவர் ஆடிய போட்டி நடனம் பிரபலம்.

சாவித்திரிக்கு முன்பே மிகவும் வேகமாக கார் ஓட்டும் நடிகை என்று திரையுலகினரால் பேசப்பட்டவர். குசல குமாரிக்கு திருமணம் ஆகவில்லை. சென்னை நந்தனம் பழைய டவர் கிளாக் கட்டிடத்தில் 6-வது மாடியில் சகோதரர் கமலசேகர் வீட்டில் வசித்து வந்தார்.

வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது. இரவு தூக்கத்திலேயே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

குசலகுமாரியின் உடல் நேற்று பகல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. குசலகுமாரி மற்றும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு ஆகியோர் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.