சினிமா செய்திகள்

அமைதியான வாழ்வுக்கு காஜல் அகர்வால் யோசனை + "||" + Kajal Aggarwal's idea of peaceful life

அமைதியான வாழ்வுக்கு காஜல் அகர்வால் யோசனை

அமைதியான வாழ்வுக்கு காஜல் அகர்வால் யோசனை
காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள பாரீஸ் பாரீஸ் படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்தியன்-2 படத்தில் தற்போது நடிக்கிறார். அவர் கூறியதாவது:-

“வேலை நெருக்கடியை குறைக்க வேண்டும், மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சில கதாநாயகிகள் ஜெபிக்கிற மந்திரம். ஒவ்வொரு விஷயமும் அவர்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். நானும் அப்படித்தான். நம்மை சுற்றி நிறைய எதிர்ப்பு சக்திகள் இருக்கின்றன.

அதன்மீது சிலர் அக்கறை செலுத்துவதை பார்த்து இருக்கிறேன். அந்த எதிர்ப்பு விஷயங்கள் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் நமக்கு வந்தால் அதனை தாங்க முடியாது. எனவே கெட்டதை விட்டு எவ்வளவு தூரத்தில் இருக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலகி இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

எதிர்மறையான எண்ணங்களை நமது மனதுக்குள் எப்போதும் வரவிடக்கூடாது. காலையில் எழுந்தவுடன் நல்ல விஷயங்களை படிப்பது, பார்ப்பது என்று ஆரம்பித்தால் அன்று முழுவதும் நன்றாக இருக்கும். அதே மாதிரி ஒருவரைபற்றி தவறாக பேசுவது தவறு. அப்படி பேசுகிறவர்களை ஊக்குவிப்பதும் தவறு. அவர்கள் பேச்சை நம்புவதும் ரொம்ப தவறானது.

இந்த தவறுகளை செய்தால் நமது அமைதிக்கு பங்கம் ஏற்படும். நிம்மதியும் போய்விடும்.”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.