சினிமாவை விட்டு விலக நினைத்தேன் - நடிகை பாவனா


சினிமாவை விட்டு விலக நினைத்தேன் - நடிகை பாவனா
x
தினத்தந்தி 9 March 2019 4:32 AM IST (Updated: 9 March 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

நடிகை பாவனா, தான் சினிமாவை விட்டு விலக நினைத்ததாக தெரிவித்தார்.


தமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பாவனா ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். பின்னர் கன்னட தயாரிப்பாளர் நவீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது தமிழில் வெளியான 96 படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார். கேரளாவில் டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பாவனா சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியதாவது:-

“எனக்கு சினிமாவில் நடிகைகள் சம்யுக்தா வர்மா, மஞ்சு வாரியர், கீது மோகன்தாஸ் என்று பலர் நெருங்கிய தோழிகளாக உள்ளனர். நடிகை ரம்யா நம்பீசனுடன் அவர் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தபோதே நட்பு இருந்தது. நான் திருமணம் செய்து கொண்ட நவீனை கன்னடத்தில் நடித்த ரோமியோ படப்பிடிப்பில் முதலில் பார்த்தேன். அப்போது எனக்கு கன்னடம் தெரியாது. இருவரும் நட்பானோம். பிறகு காதல் மலர்ந்தது.

நவீன் மலையாளி இல்லை என்பதால் முதலில் திருமணத்துக்கு யோசித்த அப்பா பிறகு சம்மதம் சொன்னார். அம்மாவும் எங்கள் காதலை ஏற்றுக்கொண்டார். சினிமாவில் அறிமுகமானதும் தொடர்ந்து 2 வருடம் பிஸியாக இருந்தேன்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி விட நினைத்தேன் அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் வந்தும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.” இவ்வாறு அவர் கூறினார்.


Next Story