சபரிமலை அய்யப்பன் பக்தி படத்தில் அனுஷ்கா
சபரிமலை அய்யப்பன் பக்தி படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சபரிமலை சுவாமி அய்யப்பன் மகிமையை சொல்லும் பக்தி படங்கள் தமிழ், மலையாளத்தில் ஏற்கனவே நிறைய வந்துள்ளன. பக்தர்கள் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடும் காலத்தில் இந்த படங்களை வெளியிடுவது வழக்கம். முன்னணி நடிகர்கள் பலர் அய்யப்பன் பக்தி படங்களில் நடித்து இருக்கிறார்கள். அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்களாகவே தயாராகி திரைக்கு வந்தன.
தற்போது முதல் தடவையாக அதிக பொருட்செலவில் அய்யப்பன் மகிமையை சொல்லும் புதிய பக்தி படம் தயாராகிறது. இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
பல மொழிகளில் இருந்து முன்னணி நடிகர்-நடிகைகளை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே அனுஷ்கா ஓம் நமோ வெங்கடேசாயா என்ற திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையை சொல்லும் பக்தி படத்தில் நடித்து இருக்கிறார். அருந்ததி, பாகுபலி, பாக்மதி உள்ளிட்ட பல படங்கள் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தின.
சபரிமலை அய்யப்பன் படத்திலும் அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்குகிறது.
Related Tags :
Next Story