சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி நடிப்பில் ‘சேதுபதி 2-ம் பாகம்’ + "||" + Sethupathi Part 2

விஜய் சேதுபதி நடிப்பில் ‘சேதுபதி 2-ம் பாகம்’

விஜய் சேதுபதி நடிப்பில் ‘சேதுபதி 2-ம் பாகம்’
வெற்றிகரமாக ஓடிய சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும் ஆர்வம் பட அதிபர்கள், இயக்குனர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. ஏற்கனவே எந்திரன், விஸ்வரூபம், சிங்கம், சண்டக்கோழி, சாமி, திருட்டுப்பயலே, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.

அடுத்து சூர்யாவின் காக்க காக்க, பிரசன்னாவின் கண்ட நாள் முதல் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இதுபோல் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா நடித்து 2011-ல் வெளியாகி வசூல் குவித்த மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்தும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆலோசித்து வருகிறார். அஜித்குமாரும், வெங்கட் பிரபுவும் இதுகுறித்து நேரிலும் சந்தித்து பேசி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2016-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சேதுபதி படத்தில் இரண்டாம் பாகத்தை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அருண்குமார் டைரக்டு செய்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். இரண்டாம் பாகத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாகவே வருகிறார். விஜய் சேதுபதி கைவசம் தற்போது சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, சிந்துபாத், மாமனிதன் ஆகிய படங்கள் உள்ளன.