சினிமா செய்திகள்

தேர்தலால் படங்கள் ரிலீசில் மாற்றம் + "||" + Movie In the release, Change

தேர்தலால் படங்கள் ரிலீசில் மாற்றம்

தேர்தலால் படங்கள் ரிலீசில் மாற்றம்
அடுத்த மாதம் திரைக்கு வர இருந்த பல படங்கள் ரிலீஸ் தேதியை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றன.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. கூட்டணியை முடித்து வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசார பணிகளில் தற்போது அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு உள்ளன.

இந்த மாதம் இறுதியில் தலைவர்கள் சுற்றுப்பயணம், வேட்பாளர்கள் பிரசாரம் சூடுபிடிக்க உள்ளது. இதனால் அடுத்த மாதம் திரைக்கு வர இருந்த பல படங்கள் ரிலீஸ் தேதியை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றன. சில படங்களை தேர்தல் முடிந்த பிறகு திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா ஆகியோர் நடித்துள்ள காஞ்சனா-3 படத்தை ஏப்ரல் 18-ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். தற்போது தேர்தல் காரணமாக படம் தள்ளிப்போகிறது. விஷால் நடித்துள்ள ‘அயோக்கியா’ படம் தேர்தல் முடிந்து மறுநாள் 19-ந் தேதி திரைக்கு வருகிறது.

மேலும் சில படங்களை தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே படங்கள் வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் சங்கம் முறைப்படுத்தி ரீலீஸ் தேதியை ஒதுக்கீடு செய்து வந்தது. ஆனால் பொங்கல் பண்டிகையில் இருந்து இந்த முறை ரத்து செய்யப்பட்டு அவரவர் விரும்பும் தேதியில் படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.