பாலியல் தொல்லையில் சிக்கிய பாத்திமா சனா
எனக்கும் பாலியல் தொல்லையை சந்தித்த அனுபவம் இருக்கிறது என்று நடிகை பாத்திமா சனா கூறியுள்ளார்.
இந்தி நடிகைகள் ‘மீ டூ’வில் தொடர்ந்து பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதில் சிக்கி உள்ளனர். நானா படேகர் மீது செக்ஸ் புகார் கூறிய தனுஸ்ரீதத்தா தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறும்படமாக எடுத்துள்ளார். இந்த நிலையில் நடிகை பாத்திமா சனாவும் பாலியல் தொல்லையை அனுபவித்ததாக புகார் தெரிவித்துள்ளார். இவர் இந்தியில் பெண்கள் மல்யுத்தத்தை மையப்படுத்தி வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘தங்கல்’ படத்தில் அமீர்கான் மகளாக நடித்து பிரபலமானார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். அமீர்கானுடன் இணைத்தும் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் இருவரும் அதனை மறுத்தனர். பாலியல் தொல்லை குறித்து பாத்திமா சனா கூறியதாவது:–
‘‘நிறைய பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியிட்டு வருகிறார்கள். எனக்கும் பாலியல் தொல்லையை சந்தித்த அனுபவம் இருக்கிறது. இதுவரை யாரிடமும் அதை சொன்னது இல்லை. மீ டூ வில் பாலியல் தொல்லை கொடுப்பவர்களை வெளிப்படுத்தி வருவதை வரவேற்கிறேன். மீ டூ பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.’’
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story