சினிமா செய்திகள்

மீண்டும் கிரிக்கெட் கதையில் ஐஸ்வர்யா + "||" + Aishwarya again in the cricket story

மீண்டும் கிரிக்கெட் கதையில் ஐஸ்வர்யா

மீண்டும் கிரிக்கெட் கதையில் ஐஸ்வர்யா
கனா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேசையே தேர்வு செய்துள்ளனர்.
‘காக்கா முட்டை’ படத்தில் சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேசுக்கு தர்மதுரை இன்னொரு திருப்புமுனை படமாக அமைந்தது. சாமி–2 படத்தில் விக்ரம் ஜோடியாக வந்தார். சிவகார்த்திகேயன் தயாரித்து கடந்த வருடம் திரைக்கு வந்த ‘கனா’ படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். 

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இதில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருந்தார். கிரிக்கெட் விளையாடி பயிற்சிகள் எடுத்து இதில் நடித்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதாக அவருக்கு பாராட்டுகளும் கிடைத்தன. 

இந்த நிலையில் கனா படத்தை தெலுங்கில் ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டர்’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்திலும் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேசையே தேர்வு செய்துள்ளனர். பீமனேனி சீனிவாசராவ் இயக்குகிறார்.

இதில் ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திலும், சலீம் இயக்கும் படமொன்றிலும் நடித்து வருகிறார். இது அவருக்கு 3–வது தெலுங்கு படம்.