ஆபாச படம் எடுத்தேன் என்பதா? கங்கனா ரணாவத்தை மிரட்டிய டைரக்டர்
ஆபாச படம் எடுத்தேன் என்று கூறியதாக கங்கனா ரணாவத்தை, டைரக்டர் ஒருவர் மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் ஜெயம்ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். குயின் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்காக ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல். இந்த நிலையில் பிரபல இந்தி டைரக்டர் பஹலஜ் நிஹலானி தன்னை வைத்து ஆபாச படம் எடுக்க முயற்சித்ததாக கங்கனா ரணாவத் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஐ லவ் யூ பாஸ்’ என்ற படத்தில் நடிக்க உள்ளாடை அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்லி நிஹலானி என்னை புகைப்படம் எடுத்தார். ஆனால் அது ஆபாச படம் என்று பிறகு தெரிந்தது. அலுவலக மேலதிகாரியுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது போன்று நடிக்க வேண்டும் என்று கூறினார். அந்த படத்தில் நடிக்க விரும்பாமல் விலகி விட்டேன்” என்றார்.
இந்த குற்றச்சாட்டை இயக்குனர் நிஹலானி மறுத்தார். அவர் கூறும்போது. “ஐ லவ் யூ பாஸ் ஆபாச படம் இல்லை. இந்த படத்துக்காக எடுத்த கங்கனாவின் புகைப்படங்களை பார்த்துதான் மகேஷ் பட், கேங்க்ஸ்டர் படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த பட வாய்ப்பு கிடைத்ததும் எனது படத்தில் இருந்து விலகிவிட்டார். அவர் என்னிடம் விளையாட்டு காட்டினால், நானும் பதிலுக்கு விளையாட வேண்டி வரும்” என்றார்.
Related Tags :
Next Story