சினிமா செய்திகள்

ஜெயலலிதாவாக நடிக்க பொருத்தம் இல்லாதவர் கங்கனா ரணாவத்துக்கு நடிகை ஸ்ரீரெட்டி எதிர்ப்பு + "||" + Act as Jayalalithaa Incomparable Kangana Ranawatte Actress Srireddy is opposed

ஜெயலலிதாவாக நடிக்க பொருத்தம் இல்லாதவர் கங்கனா ரணாவத்துக்கு நடிகை ஸ்ரீரெட்டி எதிர்ப்பு

ஜெயலலிதாவாக நடிக்க பொருத்தம் இல்லாதவர் கங்கனா ரணாவத்துக்கு நடிகை ஸ்ரீரெட்டி எதிர்ப்பு
ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் சினிமா படம் தயாராகிறது.
இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.

ஏற்கனவே தமிழில் தாம்தூம் படத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்தியில் குயின் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்த நிலையில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் பொருத்தமானவர் இல்லை என்று நடிகை ஸ்ரீரெட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-


“ஜெயலலிதா இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்றவர். ஆட்சியையும், கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். அவருக்கு இணையானவர் யாரும் இல்லை. அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது மிகவும் முக்கியமானது. எதிர்கால சந்ததியினர் ஜெயலலிதாவை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த படம் இருக்க வேண்டும்.

ஆனால் எனக்கு தெரிந்தவரையில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க யாரும் இல்லை. ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் பொருத்தமாக இருப்பார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு பதிலாக தென்னிந்திய நடிகைகளில் ஒருவரை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தேர்வு வேண்டும். இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.