“காதலித்து ஏமாற்றியவனை பழிதீர்த்தேன்” -நடிகை டாப்சி


“காதலித்து ஏமாற்றியவனை பழிதீர்த்தேன்” -நடிகை டாப்சி
x
தினத்தந்தி 2 April 2019 4:00 AM IST (Updated: 2 April 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த டாப்சி இப்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி.

“திரையுலகம் கதாநாயகிகளுக்கு சாதகமாக இருக்கிறது. முன்பெல்லாம் கதாநாயகர்களை மனதில் வைத்து கதைகளை தயார் செய்தனர். ஆனால் இப்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரி படங்கள் எடுக்கிறார்கள். இது மகிழ்ச்சியான விஷயம். இந்தியில் எனக்கு நல்ல படங்கள் வருகிறது. முல்க், பிங்க், பட்லா உள்பட நான் நடித்த படங்கள் நன்றாக ஓடின. பட்லா என்றால் பழிவாங்குதல் என்று பொருள்.

பழிதீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வந்து இருக்கும். எனக்கும் அது வந்தது. நான் பத்தாவது படித்தபோது ஒருவனை நேசித்தேன். அவனுடன் நெருக்கமாக இருந்தேன். சில நாட்களுக்கு பிறகு அவன் என்னை விட்டு விலக ஆரம்பித்தான். சரி என்று நானும் விட்டு விட்டேன்.

கொஞ்ச காலத்துக்கு பிறகு சமூக வலைத்தளம் மூலமாக என்னை பார்த்து மீண்டும் என்னுடன் நெருங்கி வர முயற்சி செய்தான். அவன் இன்னொரு பெண்ணுடன் நட்போடு இருப்பது எனக்கு தெரியும். அதனால் அவனை பேச வைத்து பதிவு செய்து அவற்றை அந்த பெண்ணுக்கு அனுப்பி வைத்து அவனை பழி தீர்த்துக்கொண்டேன். தென்னிந்தியாவில் கதாநாயகிகளை ராணி மாதிரி பார்க்கிறார்கள். எதிர்காலத்தில் பெண் தொழில் அதிபராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. இவ்வாறு டாப்சி கூறினார்.

Next Story