சத்யராஜ்-சரண்யாவுடன் ஆணவ படுகொலைகளை பற்றிய படம்
ஆணவ படுகொலைகளை மையப்படுத்தி, ‘ஆத்தா’ என்ற படம் தயாராகிறது.
ஆணவ படுகொலைகளை மையப்படுத்தி, ‘ஆத்தா’ என்ற படம் தயாராகிறது. இதில் சத்யராஜ், சரண்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ஜீன்ஸ்காந்த்.
படத்தை பற்றி இவர் கூறும்போது, “ஒரு மனிதனை மனிதனாகத்தான் பார்க்க வேண்டும். சாதி-மதத்தோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் படம், இது.
ஆணவ படுகொலைகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கூடிய இந்த கதைக்கு, திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருக்கிறேன். ஜீன்ஸ் ஸ்டுடியோ தயாரிக்கிறது. தேனி, வீரபாண்டி, கம்பம், கோம்பை, மேகமலை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது” என்கிறார்.
Related Tags :
Next Story