டைரக்டருடன் ஜோடி சேர்ந்த ‘கயல்’ ஆனந்தி!


டைரக்டருடன் ஜோடி சேர்ந்த ‘கயல்’ ஆனந்தி!
x
தினத்தந்தி 2 April 2019 1:25 PM IST (Updated: 2 April 2019 1:25 PM IST)
t-max-icont-min-icon

‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தில் டைரக்டருடன் ஜோடி சேர்ந்த ‘கயல்’ ஆனந்தி!


‘மூடர் கூடம்’ படத்தின் டைரக்டர் நவீன் எம். கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கும் புதிய படம், ‘அலாவுதீனின் அற்புத கேமரா.’ இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், ‘கயல்’ ஆனந்தி. ‘96’ படத்தின் தயாரிப்பாளரான நந்தகோபால், வில்லனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் ‘டைட்டில்’ காட்சியாக ஒரு பாடல் இடம் பெறுகிறது. அதில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், சென்ராயன், ஓவியா, பாடல் ஆசிரியர் யுகபாரதி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

அஜித்குமாரின் முதல் படமான ‘அமராவதி’யின் இசையமைப்பாளர் பாலபாரதி, இந்த பாடலை பாடியிருக்கிறார். அவருடைய குரல் பாகவதர் ஸ்டைலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்தது. படத்தை வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.


Next Story