திருப்பதி கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்


திருப்பதி கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்
x
தினத்தந்தி 3 April 2019 5:00 AM IST (Updated: 2 April 2019 11:25 PM IST)
t-max-icont-min-icon

நடிகை சமந்தா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் அவரது நடிப்பில் யு டர்ன், நடிகையர் திலகம், இரும்புத்திரை, சீமராஜா படங்கள் வெளிவந்தன. விஜய் சேதுபதியுடன் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 

கணவர் நாகசைதன்யா ஜோடியாக நடித்துள்ள மஜிலி தெலுங்கு படம் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது. திருமணத்துக்கு பிறகு முதல் முறையாக இருவரும் ஜோடி சேர்ந்துள்ளதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் சமந்தா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 

கணவர் குடும்பத்தினர் வெங்கடாஜலபதியின் தீவிர பக்தர்கள். மாமனார் நாகார்ஜுனா நமோ வெங்கடேசாயா என்ற பக்தி படத்தில் நடித்துள்ளார். திருமணம் முடிவானதும் சமந்தா திருப்பதிக்கு சென்று சாமி கும்பிட்டார். தற்போது கணவருடன் சேர்ந்து நடித்துள்ள மஜிலி தெலுங்கு படம் திரைக்கு வரும் நிலையில் மீண்டும் திருப்பதி கோவிலில் சாமி கும்பிட்டார். 

சமந்தாவை பார்த்ததும் ஆட்டோகிராப் வாங்க ரசிகர்கள் கூடினார்கள். பாதுகாவலர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தினார்கள்.

Next Story