தயாரிப்பாளரான அமலாபால்


தயாரிப்பாளரான அமலாபால்
x
தினத்தந்தி 5 April 2019 4:30 AM IST (Updated: 4 April 2019 11:18 PM IST)
t-max-icont-min-icon

மலையாளத்தில் தயாராகும் கேடவர் படத்தை அமலாபால் தயாரிக்கிறார்.

மைனா படத்தில் பிரபலமாகி முன்னணி நடிகையாக உயர்ந்த அமலாபால் இப்போது வழக்கமான காதல் படங்களில் நடிப்பதை தவிர்த்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறார். ஆடை படத்தில் அவர் நடிக்கும் வித்தியாசமான தோற்றம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அரைகுறை ஆடையில் ரத்த காயங்களுடன் அழுதபடி இருப்பதுபோல் அந்த படம் இருந்தது. 

அதோ அந்த பறவைபோல, மலையாளத்தில் நடிக்கும் ஆடுஜீவிதம் ஆகிய படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவை. 3 படங்களுமே இந்த ஆண்டில் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் புதிதாக தயாரிப்பாளராகவும் அமலாபால் மாறி இருக்கிறார். 

ஒரு போலீஸ் சார்ஜன்டே ஓர்ம குறிப்புகள் என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் தயாராகும் கேடவர் படத்தை அமலாபால் தயாரிக்கிறார். அமலாபால் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவும் செய்கிறார். 

நோய் குணங்களை ஆராயும் வல்லுனர் கதாபாத்திரத்தில் வருகிறார். இதற்காக மருத்துவ நிபுணர்களை சந்தித்து பயிற்சி எடுத்துள்ளார். கேடவர் படம் திரைக்கு வந்து லாபம் சம்பாதித்தால் தொடர்ந்து படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார். மலையாளத்தில் இருந்து வந்த நயன்தாராவும் படங்கள் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story