நயன்தாராவுக்கு அப்பாவாக நடிக்கும் பேராசிரியர்!


நயன்தாராவுக்கு அப்பாவாக நடிக்கும் பேராசிரியர்!
x
தினத்தந்தி 5 April 2019 12:27 PM IST (Updated: 5 April 2019 12:27 PM IST)
t-max-icont-min-icon

விஜய் படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடிக்கும் பேராசிரியர்!

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகன் விஜய் இதுவரை 62 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 63-வது படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. அட்லீ டைரக்டு செய்து வருகிறார். விஜய் நடித்த ‘தெறி,’ ‘மெர்சல்’ ஆகிய 2 படங்களை ஏற்கனவே அட்லீ டைரக்டு செய்து இருக்கிறார். இருவரும் இணைந்து பணிபுரியும் 3-வது படம், இது.

இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருக்கு அப்பாவாக பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் நடிக்கிறார்.

கால்பந்து விளையாட்டை கருவாக கொண்ட இந்த படத்துக்கு இன்னும் பெயர்’ சூட்டப்படவில்லை. படத்தின் 2 கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்றுள்ளன. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், மிக பிரமாண்டமான விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அதில், கால்பந்து வீரராக விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. விஜய் விளையாடும் கால்பந்து போட்டியை நயன்தாரா பார்த்து ரசிப்பது போன்ற காட்சியும் படமாக்கப்பட உள்ளது. இந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.


Next Story