சினிமா செய்திகள்

புதிய சிகை அலங்காரத்துடன், திரிஷா! + "||" + Trisha is always with Saravanan's new hairstyle

புதிய சிகை அலங்காரத்துடன், திரிஷா!

புதிய சிகை அலங்காரத்துடன், திரிஷா!
‘எங்கேயும் எப்போதும் சரவணன்’ படத்தில் புதிய சிகை அலங்காரத்துடன், திரிஷா!
தென்னிந்திய சினிமாவில் 15 வருடங்களாக நடித்து வரும் திரிஷா, இதற்கு முன்பு ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். அடுத்து இவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துக்கு, ‘எங்கேயும் எப்போதும் சரவணன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். அவரிடம் உதவி டைரக்டராக இருந்த சரவணன் டைரக்டு செய்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. படத்துக்காக திரிஷா தனது சிகை அலங்காரத்தை மாற்றியிருக்கிறார். தலைமுடியின் நீளத்தை குறைத்து இருக்கிறார். ‘எங்கேயும் எப்போதும் சரவணன்’ படத்தில் அவர் புதிய சிகை அலங்காரத்துடன் நடிக்க இருக்கிறார்.

இதையடுத்து திரிஷா, சிம்ரனுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். 2 தெலுங்கு படங்களிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


ஆசிரியரின் தேர்வுகள்...