சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் முதல் போஸ்டர் எப்ரல்.10-ம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல் + "||" + Rajinikanth is the first poster of the new film

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் முதல் போஸ்டர் எப்ரல்.10-ம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல்

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் முதல் போஸ்டர் எப்ரல்.10-ம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல்
‘ பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் முதல் போஸ்டர் எப்ரல்.10-ம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,

‘ பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வருகிற 10-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. முதல்நாளில் வில்லன்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போன்ற அதிரடி சண்டை காட்சியை படமாக்குகின்றனர்.

இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்று மாதங்கள் தொடர்ந்து மும்பையில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இடையில் வருகிற 18-ந் தேதி மட்டும் ரஜினிகாந்த் சென்னை வந்து தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ஜூலை மாதம் சென்னையில் சில காட்சிகளை படமாக்கிய பிறகு படப்பிடிப்பு நிறைவடைகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு அவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. 

இந்நிலையில்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் முதல் போஸ்டர் எப்ரல்.10-ம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  முதல் போஸ்டர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து  ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.