சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ‘பேட்ட’ வெற்றி படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் எது, அதை இயக்கும் டைரக்டர் யார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார்!

***

தமன்னா இதுவரை வில்லியாக நடித்து இருக்கிறாரா? (எஸ்.ஆனந்த், சேலம்)

தங்க நிறத்தழகிகளில் ஒருவரான தமன்னாவை வில்லியாக பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள். கதாநாயகியாக பார்க்கவே நிறைய பேர் விரும்புகிறார்கள்!

***

குருவியாரே, சத்யராஜுக்கும், நாசருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

இருவருமே வில்லனாகவும் நடித்து இருக்கிறார்கள். கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார்கள்!

***

‘நெடுநல்வாடை’ படத்தின் நாயகி அஞ்சலி நாயர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், அவருக்கு புது பட வாய்ப்பு எதுவும் வந்திருக்கிறதா? (ஜே.மோகன்குமார், திருச்சி)

அஞ்சலி நாயர், கேரளாவை சேர்ந்தவர். அவருக்கு நிறைய புது பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். அந்த வாய்ப்புகளில் சிறந்ததை தேர்ந்தெடுத்து நடிக்க அஞ்சலி நாயர் விரும்புகிறார்!

***

குருவியாரே, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற தனுஷ், இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறாரா? (ஆர்.ஜெயராமன், தூத்துக்குடி)

‘கொடி’ படத்தில் தனுஷ், அண்ணன்–தம்பியாக 2 வேடங்களில் நடித்து இருந்தார். அடுத்து, ‘அசுரன்’ என்ற படத்தில், அப்பா–மகனாக இரட்டை வேடங்களில் தனுஷ் நடித்து வருகிறார்!

***

பிரபுதேவா மீண்டும் இந்தி படத்தை இயக்குவதற்கு மும்பை போய்விட்டாராமே...? இரண்டாவது ரவுண்டிலும் அவர் ஜெயிப்பாரா? (ஏ.வசந்தராஜ், ஸ்ரீபெரும்புதூர்)

இரண்டாவது ரவுண்டில் ஜெயிக்க வேண்டும் என்ற திடமான முடிவுடன் பிரபுதேவா, ‘தபாங்’ படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்குகிறார். அதில் கதாநாயகனாக சல்மான்கான் நடிக்கிறார்!

***

குருவியாரே, நடிகர் அருண் விஜய், டைரக்டர் மகிழ்திருமேனி ஆகிய இருவரும் சேர்ந்து பணிபுரிந்தாலே அது வெற்றிப்படமாகி விடுகிறதே...அது எப்படி? (எம்.ராஜராஜன், நாமக்கல்)

திறமையான நடிப்பும், சிறந்த திரைக்கதையும் இணையும்போது, வெற்றி சாத்தியமாகிறது. வேறு ரகசியம் எதுவும் இல்லை!

***

சுனைனா நடித்த ஆரம்பகால படங்கள் வெற்றி பெற்றாலும், அவர் முன்னணி கதாநாயகியாக முடியவில்லையே, ஏன்? (எஸ்.தமீம் அன்சாரி, மேலப்பாளையம்)

முன்னணிக்கு வருவதற்கான நுட்பம், சுனைனாவுக்கு தெரியவில்லையாம்!

***

குருவியாரே, கே.ஆர்.விஜயாவை அடுத்து அம்மன் வேடத்துக்கு பொருந்திய நடிகை யார்? (கே.ஆர்.உதயகுமார், சென்னை–1)

ரம்யாகிருஷ்ணன்! இவருக்கு கருமாரி வேடமும் பொருந்தும். காமாட்சி வேடமும் பொருந்தும்!

***

சூர்யா நடித்த ‘என்.ஜி.கே.’ படம் எப்போது திரைக்கு வரும்? (சி.கோபால்சாமி, கோவில்பட்டி)

‘என்.ஜி.கே.’ படத்தை அடுத்த மாதம் (மே) திரைக்கு கொண்டுவர தீவிர முயற்சி நடக்கிறது!

***

குருவியாரே, குழந்தை நட்சத்திரமாக மீனா அறிமுகமான முதல் படம் எது, அவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் எது? (கே.சீனிவாசன், கொண்டலாம்பட்டி)

குழந்தை நட்சத்திரமாக மீனா அறிமுகமான முதல் படம், ‘நெஞ்சங்கள்.’ கதாநாயகியாக அறிமுகமான படம், ‘ஒரு புதிய கதை.’

***

அரசியல், சினிமா ஆகிய இரண்டிலும் இன்னமும் பிரகாசிக்கும் நட்சத்திரம் யார்? (இரா.பாலசிங், கோவூர்)

ரோஜா செல்வமணி. ஆந்திர மாநில அரசியலில் ஈடுபட்டுக்கொண்டே சினிமாவிலும் நடித்து வருகிறார்!

***

குருவியாரே, பழம்பெரும் நடிகைகள் எம்.என்.ராஜம், விஜயகுமாரி ஆகிய இருவரும் தற்போது படங்களில் நடிப்பதில்லையே, ஏன்? (எம்.கே.கவுதம், வண்டலூர்)

நடித்தது போதும் என்ற முடிவுக்கு இருவரும் வந்து விட்டார்கள். இரண்டு பேருக்குமே பேரன்–பேத்திகள் இருக்கிறார்கள். அவர்களுடன் கொஞ்சிப்பேசி விளையாடுவதிலேயே நேரம் போய் விடுகிறதாம்!

***

கே.பாக்யராஜ் டைரக்‌ஷனில் அவருடைய சீடர் பார்த்திபன் நடித்த வெற்றி படம் எது? (வி.இன்பராஜ், அருப்புக்கோட்டை)

‘தாவணி கனவுகள்!’

***

குருவியாரே, ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் திரைக்கதையாக மாற்றி விட்டாரா, இல்லையா? (தங்கபாண்டியன், லால்குடி)

திரைக்கதையாக மாற்றும் வேலைகள் முடிவடைந்தன. அடுத்து நடிகர்–நடிகைகள் தேர்வு நடைபெற இருக்கிறது. அது நிறைவடைந்ததும், மணிரத்னம் படப்பிடிப்பை தொடங்கி விடுவார்!

***

‘பட்டாக்கத்தி பைரவன்’ என்ற கதாபாத்திரம் எந்த படத்தில் இடம் பெற்றது? (செ.பிரசன்னா, பொள்ளாச்சி)

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த ‘எங்கள் தங்கராஜா’ என்ற படத்தில் இடம் பெற்றது. அதில், ராஜா–பட்டாக்கத்தி பைரவன் என 2 வேடங்களில் சிவாஜிகணேசன் நடித்து இருந்தார்!

***

குருவியாரே, ரஜினிகாந்துடன், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேருவாரா? (பெ.நீலமேகம், ஊட்டி)

ரஜினிகாந்துடன் ஜோடி சேருவதற்கு கீர்த்தி சுரேஷ் மிக தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தகவல். அவருடைய முயற்சி வெற்றி பெறுமா? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்!

***

தமிழ் பட கதாநாயகர்களில் உயரமானவர் யார்? (பி.சின்னதம்பி, கொரட்டூர்)

விஷால்!

***

குருவியாரே, கவுண்டமணியும், செந்திலும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிப்பார்களா? (ஆர்.பவர்சிங், வேலப்பன்சாவடி)

‘‘இருவருக்கும் பொருந்துகிற மாதிரி கதையும், இரண்டு பேரும் கேட்கிற சம்பளமும் கிடைத்தால் நடிக்க தயார்’’ என்கிறார்கள்!

***

தற்போது அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் யார்? (பி.வீ.ஐயப்பன், திருத்துறைப்பூண்டி)

விஜய் சேதுபதி!

***

தொடர்புடைய செய்திகள்

1. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
2. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
3. குருவியார் கேள்வி-பதில்கள்..
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
4. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007.
5. குருவியார் கேள்வி-பதில்கள் : கீர்த்தி சுரேஷ் எங்கேதான் இருக்கிறார்?
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

ஆசிரியரின் தேர்வுகள்...