தெலுங்கு நடிகருடன் காதலா? நடிகை ரெஜினா விளக்கம்


தெலுங்கு நடிகருடன் காதலா? நடிகை ரெஜினா விளக்கம்
x
தினத்தந்தி 8 April 2019 4:00 AM IST (Updated: 8 April 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம் உள்பட பல படங்களில் நடித்தவர் ரெஜினா.

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம் உள்பட பல படங்களில் நடித்தவர் ரெஜினா. இவருக்கும் தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவின. இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாய் தரம் தேஜ் தெலுங்கு நகர் சிரஞ்சீவின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சாய் தரம் தேஜ் கதாநாயகனாக அறிமுகமான ‘பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கு ரெஜினா விளக்கம் அளித்து கூறும்போது, “கடந்த சில நாட்களான என்னை ஒரு நடிகருடன் இணைத்து அவரை நான் காதலிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதில் உண்மை இல்லை. ஆதாரமற்றது. வதந்தி. எனது வாழ்க்கையில் இப்போது நான் காதலிப்பது எனது வேலையை மட்டும்தான். வேறு யாரையும் காதலிக்கவில்லை. நான் யாரையாவது காதலித்தால் அதுகுறித்து வெளிப்படையாக அறிவிப்பேன்” என்றார்.

ரெஜினாவும் சாய் தரம் தேஜும் காதலிப்பதாக ஒரு வருடமாகவே தகவல் பரவி வந்தது. அப்போது இதனை மறுக்கவில்லை. தற்போது காதல் இல்லை என்று கூறியதன் மூலம் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு காதலை முறித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Next Story