விவாகரத்து வதந்திக்கு பதிலடியாக பிரியங்கா சோப்ரா வெளியிட்ட புகைப்படம்


விவாகரத்து வதந்திக்கு பதிலடியாக பிரியங்கா சோப்ரா வெளியிட்ட புகைப்படம்
x
தினத்தந்தி 8 April 2019 4:15 AM IST (Updated: 8 April 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

பிரியங்கா சோப்ரா சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம். நடிகை ஷோபி டர்னர், டேனியல்லா டெலிஷா ஆகியோர் அருகில் உள்ளனர்.

இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 117 நாட்கள் கடந்துள்ள நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள தயாராகி வருவதாக லண்டன் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் இடையே திருமணத்துக்கு பிறகு சுமூகமான உறவு இல்லை. பிரியங்கா பார்ட்டிகளுக்கு செல்வதை அதிகம் விரும்புவதாக கணவர் குடும்பத்தினர் கோபத்தில் உள்ளனர். இதனால் இருவரும் விவாகரத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்று லண்டன் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருந்தது..

பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அவரது சகோதரர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஏற்கனவே வெளியிட்டார். தற்போது விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரியங்கா சோப்ரா இன்னொரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனசின் சகோதரர் ஜோ ஜோனசின் வருங்கால மனைவியும் ஹாலிவுட் நடிகையுமான ஷோபி டர்னர். இன்னொரு சகோதரரான கெவின் ஜோனசின் மனைவி டேனியல்லா டெலிஷா ஆகியோர் ஒன்றாக மகிழ்ச்சியாக உள்ளனர். புகைப்படத்தில் ‘ஜோ சிஸ்டர்ஸ் ஒன்று சேர்ந்து விட்டோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story