சினிமா செய்திகள்

வில்லனாக வெங்கட் பிரபு + "||" + Venkat Prabhu as villain

வில்லனாக வெங்கட் பிரபு

வில்லனாக வெங்கட் பிரபு
சென்னை-28 படத்தை இயக்கி பிரபலமான வெங்கட் பிரபு தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
சிம்பு நடிக்கும் மாநாடு மற்றும் பார்ட்டி படங்களை தற்போது இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு ஏற்கனவே பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சிவகாசி, மழை, சரோஜா, வடகறி, விழித்திரு, தமிழ் படம்-2, முப்பரிமாணம், நினைத்தது யாரோ ஆகியவை வெங்கட் பிரபு நடித்த முக்கிய படங்கள். தற்போது வைபவ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் வெங்கட் பிரபு வில்லனாக நடிக்க உள்ளார். இந்த படம் திகில் கதையம்சத்தில் தயாராகிறது. எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார்.

வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி உள்பட மேலும் பலர் இதில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.