மோடி படத்தை பாராட்டிய காஜல் அகர்வாலுக்கு எதிர்ப்பு


மோடி படத்தை பாராட்டிய காஜல் அகர்வாலுக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 9 April 2019 5:45 AM IST (Updated: 9 April 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி என்ற பெயரில் தயாராகி உள்ள படம் விரைவில் திரைக்கு வருகிறது.

 தேர்தல் சமயத்தில் இந்த படத்தை திரையிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனை வற்புறுத்தின. கோர்ட்டுக்கும் சென்றன.

ஆனாலும் படத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. இந்த படத்தில் நரேந்திர மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இவர் தமிழில் அஜித்குமாருடன் விவேகம் படத்தில் நடித்து இருந்தார். நரேந்திரமோடி படம் திரைக்கு வருவதை தொடர்ந்து ஆதரவாக இருந்த அனைவருக்கும் விவேக் ஓபராய் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். நீதிதுறையையும் பாராட்டினார்.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் நரேந்திர மோடி படத்தை வரவேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். “விவேக் ஓபராயின் தோற்றத்தை என்னால் நம்ப முடியவில்லை. படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். நரேந்திர மோடி படம் கண்டிப்பாக நன்றாக ஓடும்” என்று டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.

மோடி படம் குறித்து காஜல் அகர்வால் வெளியிட்ட கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. அவரை பலர் கண்டித்து வருகின்றனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது படங்களில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்க கூடாது என்று ஒருவர் வற்புறுத்தி உள்ளார். ஆனால் பா.ஜனதா கட்சியினர் காஜல் அகர்வாலை பாராட்டி பதிவிடுகிறார்கள்.

Next Story