சினிமா செய்திகள்

பல வருடங்களுக்குப்பின் திரும்பி வந்தார்மீண்டும் ‘கருவாப்பையா’ கார்த்திகா! + "||" + Karthika once again

பல வருடங்களுக்குப்பின் திரும்பி வந்தார்மீண்டும் ‘கருவாப்பையா’ கார்த்திகா!

பல வருடங்களுக்குப்பின் திரும்பி வந்தார்மீண்டும் ‘கருவாப்பையா’ கார்த்திகா!
‘கருவாப்பையா’ படத்தின் கதாநாயகி கார்த்திகா, மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி விட்டார்.
‘தூத்துக்குடி’ படத்தில் கதாநாயகியாக நடித்து, “கருவாப்பையா கருவாப்பையா” என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர், கார்த்திகா. தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரை சம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு ஆகிய படங்களில் நடித்தார். தன் தங்கையின் படிப்பு காரணமாக கார்த்திகா, சில வருடங்கள் மும்பையில் வாழ்ந்து வந்தார். தங்கையின் படிப்பு முடிந்ததும் சென்னை திரும்பி விட்டார்.

இவர், சென்னை வடபழனியில் உள்ள மால் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். “கருவாப்பையா கார்த்திகா” என்றபடி, சூழ்ந்து கொண்டார்கள். தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு மகிழ்ச்சி அடைந்த கார்த்திகா, மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி விட்டார். இவருக்கு சில தொலைக்காட்சிகளில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதற்கு கார்த்திகா மறுத்து விட்டாராம்.

“திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன்” என்று உறுதியாக இருக்கும் கார்த்திகாவை மீண்டும் படங்களில் நடிக்க வைக்க சில டைரக்டர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...