நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: நடிக்க தடை விதிப்போம் என்பதா? நடிகர் ராதாரவி ஆவேசம்
நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் ராதாரவி கலந்து கொண்டு நயன்தாரா குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் ராதாரவியின் பேச்சை கண்டித்தனர். நடிகர் சங்கமும் ராதாரவி நடிக்க தடை விதிப்பதாக எச்சரித்தது.
தி.மு.க.வில் இருந்தும் ராதாரவி நீக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னையில் நடந்த ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்ற குறும்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசும்போது தன்னை கண்டித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:-
“பயம் என்பது எனது குடும்பத்தில் யாருக்கும் கிடையாது. எதற்கு பயப்பட வேண்டும். சிலர் நடிப்பதை நிறுத்தி விடுவோம் என்கிறார்கள். அது முடியாது. நான் நாடகத்தில் நடித்தால் உங்களால் எப்படி தடுக்க முடியும். நான் சந்தித்தது ஒரு பிரச்சினையே இல்லை. இது என்ன ஐ.நா. பிரச்சினையா. நம்ம பேசியதில் உண்மை இருக்கா? இல்லையா? அவ்வளவுதான்.
உண்மை என்றவன் ஏத்துக்கிட்டு போ. இல்லை என்றவன் விட்டுட்டு போ. கொலையுதிர் காலம் பட விழாவில் பேசியதில் யாராவது மனவருத்தம் அடைந்தால் அவர்களிடம் நான் மன வருத்தப்படுவதாக சொல்லுங்கள் என்று சொன்னேன். மன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது. எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். கொலை குற்றமா செய்துவிட்டேன்.”
இவ்வாறு ராதாரவி பேசினார்.
டைரக்டர் பேரரசு பேசும்போது ‘நயன்தாரா குறித்து ராதாரவி பேசியதில் தவறு இல்லை’ என்றார்.
Related Tags :
Next Story