சினிமா செய்திகள்

விக்ரம் பிரபு ஜோடி, மடோனா செபாஸ்டியன் + "||" + Vikram Prabhu pair, Madonna Sebastian

விக்ரம் பிரபு ஜோடி, மடோனா செபாஸ்டியன்

விக்ரம் பிரபு ஜோடி, மடோனா செபாஸ்டியன்
மணிரத்னத்தின், `வானம் கொட்டட்டும்' படத்தில் விக்ரம் பிரபு ஜோடி, மடோனா செபாஸ்டியன்
இருவர், நேருக்கு நேர், உயிரே, அலைபாயுதே, ராவணன், காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ். இந்த நிறுவனத்தின் 19-வது தயாரிப்பாக, `வானம் கொட்டட்டும்' என்ற புதிய படம் தயாராகிறது.

இதில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை-வசனத்தை மணிரத்னமும், தனாவும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள். தனா, மணிரத்னத்தின் உதவியாளர். ஏற்கனவே, `படை வீரன்' என்ற படத்தை டைரக்டு செய்திருக்கிறார்.

அந்த படத்துக்காக அனைத்து தரப்பினரின் பாராட்டுகளை பெற்ற இவர், `வானம் கொட்டட்டும்' படத்தை டைரக்டு செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளார். `96' படத்தில் பணிபுரிந்த கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார். `அபியும் நானும்' படத்துக்கு ஒளிப் பதிவு செய்த பிரீத்தா, இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க இருக்கிறது.