10 கோடி பேர் பார்த்தனர் : விஜய்யின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் சாதனை
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.
மெர்சல் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விவேக் எழுதிய ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் ஏற்கனவே பல சாதனைகளை நிகழ்த்தியது. தற்போது இந்த பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
ஒரு தமிழ் படத்தின் பாடல் 10 கோடி பார்வையாளர்களை பெற்று இருப்பது பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இதுகுறித்த தகவல் வெளியான உடனே ‘100 மில்லியன் ஆளப்போறான் தமிழன்’ என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இதை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டி வருகிறார்கள்.
ஆளப்போறான் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் கூறியதாவது:-
“ஆளப்போறான் தமிழன் பாடலை 10 கோடி பேர் பார்த்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்களின் உணர்வு சார்ந்த பாடல்கள் வெகுவான பார்வையாளர்களை சென்று அடைய வேண்டும். இன அடையாளம் எங்கே தொலைந்து விடுமோ என்ற கருதிய நேரத்தில்தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒற்றுமையை காட்டினார்கள்.
ஆளப்போறான் தமிழன் பாடலில் இருக்கும் உணர்வு தமிழர்களுடையது. வரிகள் மட்டுமே என்னுடையது. சரியான பாதையில் எனது கலைப்பயணம் திரும்ப ஒரு வாய்ப்பை இந்த பாடல் உருவாக்கி கொடுத்து இருக்கிறது. விஜய் நடிப்பு, ஏ.ஆர்.ரகுமான் இசை, அட்லி காட்சிப்படுத்திய விதம் ஆகியவற்றினால் தான் இந்த பாடல் சாதனை உயரத்தை எட்டி பிடித்துள்ளது. தற்போது ரஜினிகாந்தின் தர்பார் மற்றும் விஜய் நடிக்கும் படங்கள் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறேன்.”
இவ்வாறு விவேக் கூறினார்.
Related Tags :
Next Story