மரக்கன்றுகள் நட நடிகர் கார்த்தி உதவி
நடிகர் கார்த்தி சமூக நல பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் அகரம் பவுண்டேஷனில் அங்கம் வகிக்கிறார். விவசாயிகளுக்கும் உதவி வருகிறார்.
தனது படங்களில் பருத்தி ஆடைகள் அணிந்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பையும் தொடங்கி உள்ளார். இதன்மூலம் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவித்து வருகிறார். இந்த அமைப்பு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறது. தற்போது மரக்கன்றுகள் நடும் பணிகளுக்காகவும் உதவி வழங்கி இருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியை செய்து வருகிறார். மற்றவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கி வருகிறார். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். மரகன்றுகள் நடும் கருணாநிதி பணியை ஊக்குவிக்கும் வகையிலும் அவரது சேவையை பாராட்டியும் நடிகர் கார்த்தி ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

Related Tags :
Next Story